2004 பொதுத்தேர்தலில் பெற்ற வெற்றியைக் கொண்டாடவும் வரும் காலச் செயல்பாடுகளைப் பற்றித் திட்டமிடவும் பத்தாண்டுகளுக்குமுன் இதே இடத்தில் நாம் சந்தித்ததை நினைவு கூர்கிறேன். பத்தாண்டுகளை திரும்பிப்பார்கையில் எதிர்வரும் பத்தாண்டுகளை பற்றியும் சிந்திக்குமாறு கோருகிறேன்.
கடந்த பத்தாண்டுகள்,நாட்டிற்குத் தலைமை வகிக்க மக்களால் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டதென உருதியாகக் கூறுகிறேன். அடுத்த பத்தாண்டுகளும் நாடடிற்கு தலைமை தாங்குமாறு மக்கள் காங்கிரஸ் கட்சியைக் கோருவார்கள் என்பதில் ஐயமில்லை.
தாராளமான குடியாட்சியை ஏற்படுத்தவேண்டும்! நம் நாட்டைப் பற்றிக்கொண்டுள்ள எண்ணத்தைப் பற்றிக் காங்கிரஸ்கட்சித் தலைவர் உணர்சிவயப்பட்டும், வருத்தப்பட்டும், பேசினார். அதை மீண்டும் மீண்டும் சொல்வது தகும் எனக் கருதுகிறேன்.நாம் அரசியல் சுதந்திரம் பெற்றுளளேம். இன்னும் வெறுபல சுதந்திரங்களைப் பெறவேண்டும். நம் மக்களுக்குச் சமூகநீதி கிடைக்கவேண்டும்.பசி.பட்டினி.
நமது வளர்ச்சி முன்னேற்றத்திற்கு வழிகோலும் மதச் சுதந்திரம் நீதி சுதந்திரம் என எவவித வேறுபாடின்றி இநநாட்டிலுல்ல எல்லா ஆண்களும் பெண்களும் சமூகநீதி பெறவேண்டும் மத்திய,மாநில அரசுகளின் ஒவ்வொரு பிரிவும் ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்.அவர்களுக்கு அரசும் நிர்வாகமும் துனை நிற்கவேண்டும். பவவீனமான சிறுபாண்மையின தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆதரவை எதிர்பார்கிறார்கள். நமது பணி ஐந்தாண்டுகளிலோ, பத்தாண்டுகளிலோ வாழ்நாள் முடிவதற்குள்ளோ முடிவதில்லை! நமது அரசியல் வாழ்வும், தலைமையும்,போராட்டமும், தியாகமும் இனைந்த முடிவில்லா வீரச்செயலாகும்!
நாட்டின் நிலையான வளர்ச்சி!
திரு.குலாம் நபி ஆசாத், கடந்த பத்தாண்டுகளில் நாம் அவற்றை செயலாக்க என்ன செய்தோம் என்பதையே கூறினார். அவர் பேசிய ஒவ்வொரு வாக்கியமும் முக்கியமானது! கடந்த பத்தாண்டுகளில் பெருமைபடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளோம். இதனைப் பாதுகாக்க வேண்டுமெனக் கௌரவமாகக் கோருகிறேன், இத்தகைய மிகப்பெரிய வளர்சியும் உயர்வும் அமைந்த சாதனையை நம் நாட்டின் வரலாற்றில், எந்தப் பத்தாண்டு காலத்திலாவது பெற்றதாக கூறமுடியுமா? அத்தகைய உயர்வையும் வளர்சியையும் இந்தியாவில் வேறெந்த ஆட்சியாவது கொடுத்ததாகக் கூறமுடியுமா எனச் சவால் விடுகிறேன்.
நாம் அதிக வளர்ச்சி சதவிகிதத்தை எப்போது அடைந்தோம்? 2006 2007 இல் அடைந்தது 9.6 சதவிகித வளரச்சியாகும். நாம் எப்போது அதிகச் சேமிப்பு விகிதத்தை அடைந்தோம்? 2007 2008 இல் அடைந்தது 36.8 சதவிகித வளர்சியே! நாம் எப்போது அதிக முதலீட்டு விகித வளர்ச்சி அடைந்தோம்? 2007 2008 இல் அடைந்தது 38.1 சதவிகித வளர்ச்சியே! நமது அந்நியச் செலவாணி சேமிப்பில் அதிக தொகையைச் சேர்த்தோம்? 2007 2008 இல் 92 கோடி அமெரிக்கக டாலர் சேர்த்ததுதான்! இத்தகைய பதியத்தக்க வளர்ச்சியை எந்தக் காலத்திலும் எந்த அரசும் உருவாககியதில்லை.
நாட்டின் அசுர முன்னேற்றம் !
வளர்ச்சி என நான் குறிப்பிடுவது முன்னேற்றமும் சமூகநீதியுமாகும். சில சாதனைகளை காண்போம்:பத்தாண்டுகளுக்குமுன் மின் உறபத்தி 1.12.000 மெகாவாட் இன்று 2,11,000 மெகா வாட் இது வளர்ச்சி தானே! அருணாச்சலப் பிரதேசத்திலும் ஜார்க்கண்டிலும் இந்தியாவின்கடைசிபகுதியிலும் மின் உற்பத்தியில் அடைந்த முன்னேற்றம் அது! பத்தாண்டுகளுக்குமுன் நாம் 213 கோடி டன் உணவு தாணிய உற்பத்தி செய்தோம். இன்று நாம் 259 கோடி டன்னாக அதை உயர்த்தியுள்ளோம். ஒரு குவின்டால் கோதுமை விலை 610ஆக இருந்தது, இப்போது அது ரூ.1350 . பத்தாண்டுகளுக்கு 4676 வங்கிக் கிளைகள் இருந்தன. இன்று
74450 வங்கிக் கிளைகள் உள்ளன. இது வளர்ச்சிதானே! அதுவும் மணிப்பூர் அந்தமான் நிக்கோபார் ராஜஸ்தான் ஜம்மு-காஷ்மீர் அகிய பகுதிகளில் இருத்தல் முன்னேற்றம்தானே!
சமுதாய உயர்வும் சமுதாய நீதியும்
பத்தாண்டுகளுக்குமுன் கல்வி கடனுக்காக ஒரு ஆயீரம் ரூபாய்களே வழங்கப்பட்டன, மொத்தமாக ரூ.4500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்று நிலுவையாக உள்ள கல்விக்கடன் ரூபாய் 57000 கோடி ஆகும். பெரும்பாலான கடன் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிருபான்மையின, குறிப்பாக மகளிர், பெண் குழந்தைகள் ஆகியோருக்குக் வழங்கப்பட்டது. அதிகக் கடன் என்பது வளர்ச்சி! ஏழைகளில் படிக்கும் முதல் சந்ததியினர், மாணவ மாணவியருக்குக் கடன் கொடுப்பதென்பது சமுதாய உயர்வும், சமுதாய நீதியுமாகும்.
பத்தாண்டுகளுக்குமுன் சிறுபான்மையினர் மிகுந்த பகுதிகளில் 121 மாவட்டங்களில் 1415000 வங்கி கணக்குகள் இருந்தன.அந்த 121 மாவட்டங்களில் இன்று 4352000 கணக்கு வைத்துள்ளனர். பத்தாண்டுகளுக்குமுன் இந்த வங்கிகள்மூலம் ரூ 4000 கோடி கடனாகக் கொடுக்கப்பட்டது. இன்று சிறுபான்மையின மக்களுக்கு ரூ.66,500 கோடி கடனாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் சமுதாய உயர்வும் நீதியும் ஆகும்.
பத்தாண்டுகளுக்குமுன் மக்கள் நலத்திற்காக ரூ.7,500கோடி செலவிடப்படுகிறது. பத்தாண்டுகளுக்குமுன் மக்கள் கிராமப்புறச் சாலைகள் 104288 கிலோ மீட்டர் இருந்தன. தற்போது அது 391361 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. சத்தீஷகர்,மேகாலாயா.ஜம்மு-காஷ்
கடந்த பத்தாண்டுகளில் அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் செயல்பட்ட நமது இரு ஐந்தாண்டுகாலா அரசுகள், சமூகநீதியுடன் கூடிய உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் பெரும் சாதனைகள் செய்துள்ளது. இவை தம் நாட்டின் மூலைமுடுக்குகளுக்கு எல்லாம் நாம் எடுத்துச் சொல்லவேண்டிய சாதனைகளாகும்.
காங்கிரசின் ஈடுஇணையில்லா சாதனை!
கடந்த 65 ஆண்டுகால நிகழ்வுகளைத் திரும்பிபார்க்குமாறு நமது நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற அரசியல் கட்சிகளைபோல காங்கிரஸ் கட்சி பதவியில் இருக்கும் போது மட்டும் மக்கள் பணியாற்றும் கட்சி அல்ல! பதவியில் இல்லாதபோது, மறைந்து போவது காங்கிரஸ் கட்சி அல்ல! மக்கள் நலம் பேணிக் கடந்த 65 ஆண்டுகளாக உருதியாய்ச் செயலாற்றி நிற்கும் கட்சி! காங்கிரஸ் கட்சியின் பாதுகாப்பில்தான். இந்திய வரலாற்றில் ஒவ்வொருதிருப்புமுனையும் நிகழ்த்தியிருக்கிறது
உலகத்தரம் வாய்ந்த நேர்மையான தேர்தகளை ஒவ்வொறு ஐந்தான்டும் காட்டியிருக்கிறது! சுதந்திரம் பெற்ற முதல் பத்தாண்டுகளில், பொதுதுறைக்கு முக்கியதுவம் அளிக்கும் கொள்கையை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. 1980 இல் புதுமையை ஏறபடுத்தியதும், 1991இல் முக்கிய பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதும் காங்கிரஸ் கட்சியே!
நம் நாடு கடந்துவந்த ஒவ்வொரு மைல் கல்லும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நட்டப்பட்டுள்ளது! இந்திரா காந்தி அவர்களும் காங்கிரஸ் அரசும்தான், பங்களாதேஷ் விடுதலை பெற்றதற்குக் காரணம். இந்திராகாந்தி பிரதமராக இருந்த காங்கிரஸ் அரசுதான் அனுசக்தி சாதனை யை நிகழ்த்தியது.
காங்கிரஸ் ஆட்சியின் போதுதான், மக்கள் விடுதலை பெறவும் ஆற்றல்களைப் பெறவும் ஒவ்வொரு சட்டமும் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. அதற்கு மூன்று சான்றுகளைமட்டும் தருகிறேன். சமுதாய கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிககும் சட்டதிருத்தம் 1951 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மேதகு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, "பஞ்சாயத்துராஜ்" சட்டம் கொண்டுவரப்பட்டது. திருமதி சோனியா காந்தி பாராளுமன்றத்தில் உணர்வு
பூர்வமாகப்பேசி. உணவு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தார்.
மக்கள் சேவையே நமது கொள்கை!
நன்பர்களே! வருங்காலத்தைப் பற்றி ஒரு சில கருத்துக்களைக் கூற விருப்புகிறேன். எதிர்காலம் என்பது கடந்த காலத்தையும் பிரதிபலிக்க வேண்டும். 272 கோட்பாடுகள் பற்றிச் சிலர் பேசுகிறார்கள். அவை பேராவல், அவை உயர்ந்த நோக்கம், ஆற்றல் பெரும் லட்சியம். அதற்காககத்தான் அரசியல் மேடைகளில், அவதுறான வசை பேச்சில் ஈடுபட்டிருக்கிறோம. ஆட்சியைப் பிடிப்பதுமட்டும் நமது நோக்மமல்ல! மக்கள் சேவை என்பதே நமது கொள்கை! மேலும் சுயேச்சையான ஐனநாயக வலிமைமிக்க அதிகப் பங்களிப்பும் வளர்ச்சிமிக்க ஆட்சியை உருவாக்குவதே தமது லட்சியம். இத்தியாவை வலிமைமிக்க நாடாக்குவதே நமது குறிக்கோள்!
"யுவபாரதம்" என முழங்குவோம்!
"யுவபாரதம்" 2014 இல் போராட நாம் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அந்தப் போராடத்திற்குத் தலைமையேற்க திரு. ராகுல் காந்தியை நமது காங்கிரஸ் செயற்குழு நியமித்துள்ளது. அது அபிஷேகம் செய்வது போற்றது! 83 கோடி மக்கள்தொகையில், 68 கோடி பேர் 25 வயதிற்குட் பட்ட இளைஞர்கள் அவர்களுக்கு வழிகாட்டுபவர் யார்? அவர்களை அழைப்பது யார்? ஆதரிப்பவர் யார்? வாய்ப்பளிப்பது யார்? வளர்ச்சி வேலை வாய்ப்பும் வருமானம் யாருக்காக? அந்த இஞைஞர்களுக்காகத்தான். வளர்ச்சியும் வேளைவாய்ப்பும் வருமானமும் யாருக்காக? அந்த இளைஞர்களுக்காகத்தான். வளர்ச்சியும் வேலை வாய்ப்பும் வருமானமும் யாருக்காக? இந்த இளைய சமுதாயத்திற்கென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வரட்டும். அவர்களே செயல் திட்டங்களை வடிவமைக்கட்டும். என்ன செய்யவேண்டுமென அவர்கள் முடிவெடுக்கட்டும் எனக் காங்கிரஸ் தலைவரிடம் முன்வைக்கிறேன்.
நான் ஒரு புதிய கருத்தினை கொண்டுள்ளேன். அது எந்த அளவு ஏற்புடையதெனத் தெரியவில்லை. பாராளுமன்றத் தொகுதிகளில் அதாவது 272 தொகுதிகள் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கெனக் காங்கிரஸ் கட்சி தனி ஒதுக்கீடு செயயவேண்டும். இந்தியா இளைய தலைமுறையினரைப் பெரும்! அதிகாரமும் ஆற்றலும் பொருப்பும் இளைய தலைமுறையினரிடம் அளிக்கப்படவேண்டும். இந்தியா வலிமைமிக்கதாக இருக்கவேண்டும். ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது இந்தியா இளமையோடு ஆற்றல்மிக்க இந்தியா யுவபாரதம் என முழங்கவேண்டும், என்ற கருத்தைப் பரிசீலனை செயய வேண்டுகிறேன்.
இளைய சமுதாயம் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்கவேண்டும். மக்களை வழிநடத்திச் செல்லவேண்டும். கடந்த பத்தாண்டுகள் வளர்ச்சியும் உயர்வும் மிகுந்திருப்பதைப்போல, எதிர்வரும் பத்தாண்டுகளும் சிறப்பு நிறைந்ததாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். இந்திய மக்கள் மீண்டும் ஒருமுறை நம்பிக்கையோடு காங்கிரஸ் கட்சியிடம் பொருப்பை ஒப்படைப்பார்கள்!
( நன்றி: தேசிய முரசு பிப்ரவரி 15-01-2014)
No comments:
Post a Comment