உட்கட்சிப் பிரச்சனைகளை பொது மேடையில் பேசக்கூடாது என்று தலைவர் ஞானதேசிகன் அறிக்கை விட்டிருக்கிறாரே?
"மறைந்த அடைக்கலராஜ் திருச்சி வட்டாரத்தில் முக்கிய தலைவர். அவரது பிறந்த நாளையொட்டி நடந்த படத்திறப்பு விழாவில் என் மன ஆதாங்கத்தை வெளியிட்டேன். திராவிடக் கட்சிகளில் பிரமுகர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் படத்திறப்பு நடத்துவார்கள்ஆனால் தமிழக காங்கிரஸில் இது போன்ற நடைமுறை பின்பற்றப்படுவதில்லையே என்ற மன வருத்தத்தைச் சொன்னேன். தவிர ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிறகும் தமிழக காங்க காங்கிரஸ் சார்பில் பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெறும். இந்த முறை அதுவும் நடத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் காங்கிரஸ் கூட்டடத்தில் பேசாமல் வேறு எங்கு போய் பேச முடியும்? தமிழக காங்கிரஸ் தலைமை ஏதேனும் ஆலோசனை கூட்டம் போட்டால் அங்கு போய் பேசலாம். ஆனால் அது போல கூட்டம் நடக்கவில்லையே! தவிர, இவையெல்லாம் சாதாரண ஏ.ஐ.சி.சி. உறுப்பினரான நான் சொல்லிச் செய்ய வேண்டிய காரியமல்ல: 45 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத நிலையில் நமது செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் செய்தால்தான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று மாநிலத்தில் சக்தியை நிரூபிக்க முடியும். இல்லையேல் செயல்படாத தமிழக காங்கிரஸ் என்ற விமர்சனம்தான் வரும. அன்று நான் பேசிய கருத்துக்கு கூட்டத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நான் ஒரு தொண்டனின் நியாயமான கருத்தை வெளிப்படுத்தியதாகத்தான் அன்று கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் நண்பர்கள் சொன்னார்கள். என் கருத்துக்களை ஒரு தொண்டனின் குமுறலாக எடுத்துக்கொள்ளுங்கள்."
"வெள்ளையனை எதிர்த்துப் போராடிய கட்சி காங்கிரஸ். சில சிறு இயக்கங்களும் அதன் சில்லரைத் தலைவர்களும் காங்கிரஸை எதிர்கிறார்கள் என்பதற்காக காங்கிரஸ் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமா? தி.மு.க.,அ.தி.மு.க,ஆகிய கட்சிகள் எதிர்ப்புகள் எது வந்தாலும் தயங்காமல், பயப்படாமல் பொதுக்கூட்டம் போடுகிறார்களே. அடுத்த சில நாட்களில் நாங்கள் அம்பேத்கர் தின விழா கூட்டம் போட்டோமே? அதல் பட்ஜெட் பற்றியும் பேசினார் நிதியமைச்சர். எந்தப் பிரச்சனையும் வரவில்லேயே. தமிழ் நாடு காங்கிரஸ் நடந்துகொண்ட முறையைப் பார்க்கும் போது கட்சி ஏதோ சில்லரைத்
தலைவர்களுக்கு பயந்து போனது போன்ற தோற்றம் தானே உருவானதுஃ"
திருச்சியில் நீங்கள் ராகுலை விமர்சித்துப் பேசியதாக காங்கிரஸில் ஒரு சாரார் சொல்கிறார்களே?
"சுத்தப் பொய். மாணவர் காங்கிரஸ் தேர்தலை மிக நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ராகுல் எடுத்த முயர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பது போலச் செயல் பட்ட சில இடைத்தரகர்களை அடையாளம் காட்டும் விதமாகத்தான் பேசினேனே தவிர,ராகுலை விமர்சனம் செய்து பேசவில்லை."
உங்கள் பேச்சு குறித்த சி.டி. ராகுலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாமே?
"நல்லது, கார்த்தி சிதம்பரம் 45 நிமிடம் தமிழில் தொடச்சியாகப் பேசினார் என்று தில்லி மேலிடத்துக்குத் தெரிய நல்ல வாய்ப்பு. மற்றபடி மேலிடம் என்னிடம் விளக்கம் கேட்டால் கொடுக்க தயாராக இருக்கிறேன்."

தமிழ் நாட்டில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளதே?
"யாரும்
எங்களைத் தனிமைப்படுத்த முடியாது. ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும்
என்று சொல்வார்கள். இன்னமும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தேர்தல்
நெருக்கத்தில் காங்கிரசுடன் சுமுகமான உறவுகொள்ள கட்சிகள்வரும். தமிழகத்தில்
உள்ள முக்கிய கட்சிகளோடு காங்கிரஸ் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்திருக்கிறது. தேர்தல் அரசியலில் பல திருப்பங்கள் வரும்."
த.மா.கா மீண்டும் உதயமாகும் என்று செய்தி அடிபடுகிறதே?
"காங்கிரஸை விட்டுப் பிரிந்து தனியாக த.மா.கா. கண்ட நிலையில் சில காலத்துக்கு பின்பு காங்கிரஸைத்தான் தஞ்சமடைய வேண்டியிருந்தது என்பது தெளிவாக இருக்கும் நிலையில் மீண்டும் பிரிந்து செல்ல வேண்டும் என்பது சிலரது சுயநலத்தின் விபரீத ஆசையாக இருக்க வேண்டும்."
காங்கிரஸை ஊழல் நாறடிக்கிறதே?
"ஊழல் குற்றச்சாட்டுக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். இருதியில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லவேண்டுமே? அதுவரை பொறுமை காட்டாமல் நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தவிர்த்து, அதை முடக்கும் மட்டமான செயல்களில் பா.ஜ.க. வுக்கு காங்கிரஸை விமர்சிக்க அருகதை இல்லை"
ஈழ விவகாரத்தில் மக்கள் காங்கிரஸின் மீது கடும் கோபமாக இருக்கிறார்களே?
"உண்மை நிலையை மறைத்து உணர்வுகளை கிளப்பும் சில பிரமுகர்கள்தான் இதற்குக் காரணம். காங்கிரஸ்ஸைப் பொருத்தவரையில் ஈழத் தமிழர்களுக்கு, சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் சம உரிமை, சம அந்தஸ்து, கெளரவம் தரப்பட வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறோம். அதுபோல வடக்கு மாநிலம், கிழக்கு மாநிலம் தனித்தனியாக உருவாக்கபட்டோ அல்லது இணைந்த ஒரு மாநிலமாகவோ உருவாக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்த வேண்டும். இருதிக்கட்ட போரில் பாதிக்கபட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். அழிக்கப்பட்ட கட்டமைப்புக்களை மீண்டும் உருவாக்கவேண்டும். அங்கே மத்திய அரசில் தமிழர்களுக்கு அதிகாரத்தில் உரிய பங்களிப்பு வேண்டும். இதையெல்லாம் எப்படி செய்ய முடியும்? இங்கே உள்ள லெட்டர்பேட் இயக்கங்கள் ஆவேசக் கூச்சல் போடுவதாலும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் போடுவதாலும் இதெல்லாம் சாத்தியப்படாது. இலங்கையுடன் முறையான தூதரக உறவைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் ராஜிய அழுத்தம் (diplomatic pressre) கொடுப்பதன் மூலமாகவும் தான் செய்ய முடியும்."
ஈழத்தில் ராஜபட்சே அரசு நடத்திய மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்ரள் தண்டிக்கப்பட வேண்டாமா?
"நிச்சயமாக! அதில் எந்தக்கருத்து வேற்றுமையும் இல்லை. சர்வதேச அமைப்புக்கள் மூலம் எந்த வகையில் சாத்தியப்படுகிறதோ அந்த வகையில்இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசுடன், இந்திய அரசு தொடர்ந்து உறவு வைத்துக் கொள்வதன் மூலமே தமிழர்களுக்கு தேவையான அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர முடியும். ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று சொன்னதன் மூலமாகவும் ஆசிய தடகளப் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதன் மூலமும் என்ன சாதித்தோம்? ஆக்கபூர்வமான நடவடிக்கை என்பது வேறு; அரசியலை மனதில் வைத்துப் போடும் ஆவேசக் கூச்சல் வேறு. பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் படுகொலை குரூரமானது ; கண்டிக்கத்தக்கது. அதே சமயம் சிறுமி கோகில வாணி உயிரை விட்டதைக் குறித்து யாரும் கவலைபடவில்லையே? அந்த அப்பாவிச் சிறுமி செய்த குற்றம் என்ன? கொகிலவாணி யார் என்று இன்றைய மாணவர்களுக்குத் தெரியாது. மனித வெடிகுன்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, அவருக்கு மாலை போட்டு அருகில் நின்று , உயிரைவிட்டவள்தான் கோகிலவாணி. இதை நாங்கள் கேட்டால், ஈழத் தமிழர்களுக்கு எதிரி காங்கிரஸ் என்று கொடி பிடிக்கிறார்கள்."
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறீர்களாமே?
"நான் சொல்வதை அழுத்தமாக பதிவு செய்யுங்கள். எந்தப் பதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. அதற்காகவும் நான் உழைக்கவில்லை. என் தந்தைக்கு கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை எந்தக் காங்கிரஸ் தலைவரும் தில்லியில் இத்தனை உச்சிக்குச் சென்றதில்லை. அந்த வகையில் எங்கள் குடும்பத்திற்கு கெளரவத்தைக் கொடுத்த கட்சிக்கு உழைப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறேனே தவிர, எந்தப் பதவியையும் எதிர்பார்த்தல்ல."
நன்றி:கல்கி வார இதல்;26:05:2013

No comments:
Post a Comment