1.கார்த்தி ப சிதம்பரம் - பன்முகத் தோற்றம்
(உறுப்பினர் - அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டி.)
- சென்னை எழும்பூரிலுள்ள - டான் போஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தார்
- வணிக நிர்வாக பட்டப் படிப்பை (Bachelor of Business Administration) அமெரிக்காவில் ஆஸ்டின்-ல் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
- சட்டக்கல்வியை இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
2.விளையாட்டு
- தலைவர் - அகில இந்திய டென்பின் பவுலிங் சம்மேளனம்
- துணைத்தலைவர் - அகில இந்திய டென்னிஸ் அமைப்பு, காமன்வெல்த் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க அமைக்கப்பட்ட அகில இந்திய டென்னிஸ் அமைப்பு குழு தலைவர்.
- முதன்மை காப்பாளர் - அகில இந்திய கராத்தே டோ - பெடரேஷன்
- பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் தேசிய அளவில் நிர்வாக உறுப்பினராக திகழும் இவர், கிரிக்கெட், டென்னிஸ், டென்பின் பவுலிங், கராத்தே மற்றும் தடகள விளையாட்டுகளின் வளர்ச்சியில் பங்கு வகிப்பவர்
- துணை நிறுவனர் - இளம் தொழில் முனைவோர் அமைப்பு
- காப்பாளர் - கருடா இளைஞர் நலப்பாசறை.
- காப்பாளர் - தேசிய வழக்கறிஞர்கள் பேரவை
- நிறுவனர் - கருத்து அமைப்பு
17 செப்டம்பர் 2008 - தினத்தந்தி மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் போராட வேண்டும் - கார்த்தி ப சிதம்பரம் பேச்சுபொதுக்கூட்டம்மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரத்தின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், கல்வி எழுச்சி நாள், அணு ஒப்பந்த வெற்றிவிழா ஆகிய முப்பெரும் விழா சென்னை எழும்பூர் வீராசாமி தெருவில் நேற்று நடைப்பெற்றது. விழாவுக்கு கவுன்சிலர் ருக்மாங்கதன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.பிரசாரம் செய்யவேண்டும்தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் காங்கிரசின் வாக்கு வங்கியை வைத்தே வெற்றி பெற்றிருக்கின்றன. காங்கிரஸ் தயவில்லாமல் திராவிட கட்சிகளால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அந்த காங்கிரஸ் கட்சியை அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பயன்படுத்தி கொள்கிறார்கள்.ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதில்லை. ஏனெனில் நாம் ஒரு சராசரி அரசியல் கட்சியாக இல்லை. மற்ற அரசியல் கட்சிகள் செய்வது போல நாம் பிரசாரமும் போராட்டமும் செய்ய வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம். நாம் செய்த காரியத்தை கூட வெளியில் சொல்ல தயங்குகிறோம்.விமர்சனம் செய்யலாம்சிறப்பு மிக்க மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். இதை நாம் யாரிடமும் சொல்வதில்லை. இந்திரா காந்தியின் காலத்தில் வங்கிகள் தேசிய உடைமையாக்கப்பட்டன. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விக்கடன் கொடுக்கிறோம். சுய உதவிக் குழுக்களுக்கான உதவித் தொகைக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மூலம் தான் நிதி வருகிறது. இதையெல்லாம் நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.தேர்தல் வரைக்கும் மட்டுமே கூட்டணி இருக்க வேண்டும். பா.ம.க, கம்யூனிஸ்டு கட்சிகளை போல ஆட்சியில் இருக்கும் அரசை விமர்சிக்கும் உரிமை காங்கிரசுக்கும் உண்டு. கூட்டணி அரசு என்றாலும் கூட நாகரீகமான முறையில் விமர்சனம் செய்யலாம். மின் வெட்டு போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் போராட வேண்டும். எனவே மக்கள் பிரச்சனைக்காக போராட்டத்திலும், புரட்சியிலும் ஈடுபடுவோம் என்று உறுதி எடுக்க வேண்டும். இவ்வாறு கார்த்தி ப.சிதம்பரம் பேசினா
Founder-director and Joint Managing Director of Chess Management Services Private Limited Mr Karti P Chidambaram is a multi-faceted personality. Karti is a politician based in Chennai and is also a member of the All India Congress Committee. He was selected by the American Council of Young Political Leaders (ACYPL) to observe the U.S. Presidential Elections, 2004.He is a Fellow of the inaugural class of the Aspen Institute, Washington in their India Leadership Initiative Programme. He holds a Business Degree from the University of Texas, Austin and a Law degree from Cambridge University, England.
Karti has been part of the Corporate Governance and Legal Services Committees of the CII and has conceived of and enabled a series of workshops and seminars on Corporate Governance and Director’s liabilities through collaborated efforts of Chess Management Services, CII and the ICSI.
He plays an active role in the development of sports and participates in select Management Committees of Cricket, Tennis & Athletics. He is the Chairman of Commonwealth Games Preparation Committee of the All India Tennis Association and and Vice President All India tennis Association AITA . He is one of the founders of the Chennai chapter of Young Entrepreneurs Organization, a worldwide association of young entrepreneurs. Karti has co-founded an online social forum, “Karuthu” (Opinion), which promotes freedom of speech.Karti has been politically and socially active in his home state of Tamil Nadu. He is a Trustee of Palani Devasthanam, which administers Palani Dhandayuthapani Temple, one of the largest religious institutions of Tamil Nadu. He has played an active and crucial role as a campaigner in all state & national general elections since 1996. He is an eloquent speaker in English and Tamil. இளைஞர்காங்கிரசை புறகணித்து விட்டு காங்கிரசில் இனி யாரும் பதவி பெற முடியாது கார்த்தி ப .சிதம்பரம் பேச்சு !இளைஞர் காங்கிரசை புறகணித்து விட்டு காங்கிரசில் இனி யாரும் பதவி பெற முடியாது கார்த்தி ப .சிதம்பரம் கூறினார்.கோவையில் இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது .இளைஞர் காங்கிரஸ் புதிய உறுபினர்களை சேர்ப்பதற்கான படிவத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப .சிதம்பரம் வழங்கினார் .இந்த படிவங்களை தொண்டா முத்தூர் எம் .எல். ஏ என். கந்தசாமி , மாநகர்ஆட்சி ஆளுங்கட்சி தலைவர் ஆர் .எஸ் .திருமுகம் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் , கோவை செல்வன் , தாராஸபி ஆகியோர் பெற்று கொண்டனர் .இக்கூட்டத்தில் கார்த்தி ப .சிதம்பரம் பேசியதாவது : நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.அரசியலை வெறுத்து ஒதுகினால் அது சுத்தமாகி விடாது. படித்தவர்கள் ,நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் .புரட்சி என்ற வார்த்தையை பயன படுத்துவதால் மட்டும் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட முடியாது .பழைய பிரச்சனைக்கு புதிய தீர்வு காண்பதுதான் உண்மையான புரட்சி .
அந்த புரட்சியை தான் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி ஏற் படுத்தி வருகிறார் .அரசியலை வெறுப்பவர்கள்,நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ராகுல் விரும்புகிறார் .இந்திய அரசியல் சரித்திரத்தில் எந்த கட்சியிலும் இல்லாத நடை முறையை காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி அமுல் படுத்தி வருகிறார் .ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் போலி உறுப்பினர்கள்தான் சேர்க்கப்பட்டனர் .இப்பொது இளைஞர் காங்கிரஸ் கட்சியில் போலி உறுப்பினர்களை சேர்க்க முடியாது .இளைஞர் காங்கிரஸ் அமைப்பை புற கணித்துவிட்டு இனிமேல் காங்கிரசில் யாரும் பதவி பெற முடியாது .இளைஞர் காங்கிரஸ் உதவி இன்றி காங்கிரசில் எம் .பி ஆகவோ எம் .எல். ஏ ஆகவோ முடியாது .சமுதாயத்தில் ஜனநாயக ரீதியாக மாற்றம் ஏற்படுத்த அரசியல் தேவை ,தனி நபரால் மாற்றம் கொண்டு வர இயலாது .தனி நபரால் குறுகிய வட்டத்தில்தான் செயல் பட முடியும் .அரசியலை வெறுப்பவர்கள் , அரசியலுக்கு அப்பாற் பட்டவர்கள் அரசியல் வாதியாக மாறினால்தான் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும் .
09 செப்டம்பர் 2009 - மாலை முரசு
காங்கிரசை வளர்க்க நினைப்பது பாவமா?
இப்படிக்கு!கார்த்தி சிதம்பரம்
காங்கிரசை வளர்க்க நினைப்பது பாவமா? திரும்பிய பக்கம் எல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியே தெரிகிறது. காரணம்...... தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி என்ற முழக்கங்கள் காங்கிரஸ் மேடைகளில் ஒலிக்கப்படுவதுதான்!தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லை என்ற நிலையை உருவாக்குங்கள் என்று அன்னை சோனியா திருச்சியில் சொன்னதும்.... தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முன்னைவிட பலமாக இருக்கிறது என்று டெல்லியில் இளம் தலைவர் ராகுல் சொன்னது தொண்டர்களின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட வார்த்தைகள்தான். காங்கிரஸ் ஆட்சி என்பதும் காமராஜர் ஆட்சி என்பதும் ஒப்புக்கு மேடைகளில் சொல்லப்படும் ஒரு முழக்கம் அல்ல... அது தொண்டர்களின் இதயத்தில் இருந்து வெளிப்படும் ஆசை!காங்கிரஸ் ஆட்சி என்பது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் முதலமைச்சர் நாற்காலியில் உட்காருவது மட்டுமல்ல... முதல்வர் ஆசனத்தில் உட்காரும் மனிதர், ஒட்டுமொத்தப் பொதுமக்களுக்கும் நடுநிலை தவறாத நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதும்தான்!பெருந்தலைவர் காமராஜர் இந்தத் தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆண்ட காலகட்டம், நல்லாட்சி நடந்த காலகட்டம். அவர் படிக்கவில்லை. ஆனால், அனைவரையும் படிக்க வைத்தார். அவரிடம் பணம் இல்லை. ஆனால், அடித்தட்டு மக்களும் அவரவர்தம் உழைப்பில் பணம் ஈட்ட அவர் காரணமாக இருந்தார். முடிவுகளை அவர் மட்டுமே எடுக்கவில்லை. சக அமைச்சர்கள் அத்தனை பேரையும் கலந்தாலோசனை செய்தே நாட்டுக்கு வேண்டிய திட்டங்களைத் தீட்டினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருக்குக் கூட எந்தச் சலுகையையும் தர மறுத்தார். இப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் ஆசை!இன்றைக்கு அரசியல் என்றாலே.... தெலுங்குப் படத்தில் பார்க்கும் வில்லன்களைப் போல நினைத்து வெறுப்படைகிறார்கள் இளைஞர்கள். அதிகாரமும், பதவியும், பணமும் அளவுக்கு அதிகமாக நெருக்கம் காட்டும்போது, ஒரு மனிதன் எப்படி எல்லாம் மாறுவான் என்பதற்கு உதாரணமான அரசியல் பிரமுகர்கள் மலிந்துவிட்ட காலத்தில்....இவர்களைப் பார்த்து இளைஞர்கள் வெறுப்படைவதும், பெண்கள் பயப்படுவதும் வாடிக்கையே. பொதுமக்களுக்கு ஓர் ஆட்சியாளர் அல்லது அரசியல்வாதி மீது நம்பிக்கை பிறக்க வேண்டுமானால், அடிப்படையான சில காரியங்களை ஒழுங்காகப் பார்த்தாலே போதும். முதலாவது மின்சார வசதி. இதுதான் அனைத்துக்கும் அடித்தளமானது. நிலக்கரியில் தயாரிக்கும் மின்சாரம் பற்றாக்குறை என்றால், நியூக்ளியர், ஹைட்ரோ, சோலார், விண்ட்... இப்படி எந்த வகையிலாவது மின்சார உற்பத்தியை அதிகரித்தாக வேண்டும். போதிய மின்சாரம் இல்லாவிட்டால், ஒரு நாட்டின் அத்தனை வளர்ச்சிகளும் தடைபட்டுப்போகும்.இரண்டாவதாக.... கல்வித்துறை. அரசுப் பள்ளிகளை முதலில் பலப்படுத்தியாக வேண்டும். ஒரு பள்ளியின் தரத்தை வைத்துத்தான் அதில் இருந்து படித்து வெளியேறும் மாணவர்களின் தரத்தைக் கணிக்க முடியும். தரம் குறைந்த அரசுப் பள்ளிகளால் தரமான மாணவர்களை உருவாக்க முடியாது. தனியார் பள்ளிக்கு இணையான உள்கட்டமைப்பு வசதியுடன் தமிழும் ஆங்கிலமும் முதல் வகுப்பு முதலே கற்றுத்தரப்பட்டால்.... அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அதற்கான நல்ல பலனைப் பெறலாம்.மூன்றாவது காவல்துறை. சட்டத்தை யார் மீறினாலும், அவர் எவராக இருந்தாலும், மந்திரி மகனாகவே இருந்தாலும் சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்ற நிலை உருவானால் மட்டும் தான் சட்டத்தின் ஆட்சி நடப்பதாகப் பெருமைப்பட முடியும்.மலேசியா, துபாயில் குற்றங்கள் குறைந்துவிட்டதற்குக் காரணம், அத்தனை பேரும் நல்லவர்களாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தம் அல்ல.அங்கு சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறார்கள். அதனால், தப்பு செய்யப் பயப்படுகிறார்கள். அந்த மாதிரியான நலைமை இங்கும் வர வேண்டும்.நான்காவது.... உள்கட்டமைப்பு வசதி இல்லாத நாடு எவ்வளவு வளர்ந்தாலும் செழிக்க முடியாது. உலகத் தரம் வாய்ந்த சாலை வசதியானது, போக்குவரத்துக்கும் வாகன ஓட்டத்துக்கும் வசதியானதாக அமைக்கப்பட வேண்டும். சாகைள் அமைப்பதற்காக ஒப்பந்தம் விடும்போதே, அந்தச் சாலைகள் குறுகிய காலத்தில் பழுதடைந்தால், அந்தச் சாலையைப் போட்ட ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும்.ஐந்தாவதாக.... நியாய விலைக் கடைகளில் தரமான அனைத்துப் பொருட்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும். சாதாரண மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இந்த அரசுக் கடைகள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். இலவசமாக வழங்கச் சொல்லவில்லை. தரமானதாய், உரிய விலையில் வழங்க வேண்டும்.இந்த ஐந்து காரியங்களைச் செய்து கொடுத்தால்தான் ஆட்சியாளர்கள் மீது, அரசியல்வாதிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? மின்சாரம்.... நினைத்தால் வரும். இல்லை என்றால் வராது. தமிழ்நாட்டின் சிறு தொழில்களை மின்வெட்டு, வெட்டிக் கொன்றுவிட்டது. கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், இன்னமும் ஓர் ஆசிரியர் பள்ளிகள், மேற்கூரை இல்லாத பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அளவே இல்லை. போலீ�ஸபற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் நல்லதுசெய்தால், தேடிபோய் பட்டம் கொடுக்கலாம். சாலைகளைப் பொருத்தவரை ஒரு நாள் மழைக்கே, யாரோ வெட்டிப் போட்டது போல சாலைகள் மாறிவிட்டன. இலவசங்களாகத் தருகிறோம் என்ற பேரில் தரம் குறைந்த பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்கப்படுகின்றன. தனியார் கடைகளில் விற்கும் விலை, யானை விலை.... குதிரை விலை ஆகிவிட்டது. இந்தநிலையில், இளைஞர்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை ஏற்படும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?நன்றி : ஜூனியர் விகடன்
Sports stars don’t make good administra
tors: Karti Chidambara m
A law graduate from the University of Cambridge, Karti Chidambaram is undoubtedly bred in a high profile political family and perhaps even has politics in his bloodstream. However, at an age when his father was already in his second term in the parliament, Karti at 42 has never contested elections. His de-trackers often like to ride on this matter and would perhaps even enjoy debating it over high tea. To that Karti counters by stating that he isn’t an ‘armchair inheritor’ and loves to be involved with something that he has always been passionate about – tennis and more recently tenpin bowling.
He is a front runner in sports organisations and holds portfolios in four different sports bodies – chief patron of the All-India Karate Federation, president of the Tenpin Bowling Federation (India) and the vice-president of All India Tennis Association and the Tamil Nadu Tennis Association. He never gets tired of insisting that: tennis is his passion and has been associated with tennis even before he was associated with politics. Over the years he has been avidly involved in grooming some of the young tennis players from Tamil Nadu and even funds their training programme in Germany.
He is a member of the AICC but has earned popularity as a sports administrator. In Bengaluru for the 5th National Tenpin Bowling Championship that begins on the morrow, Karti Chidambaram spoke to deccanchronicle.com about the aggravated controversy over suspension of the Indian Olympic Association (IOA) and about the future of Indian tennis.
Excerpts from an interview:
IOA has run into major trouble and the eye of the storm is the involvement of politicians who precariously run the sporting bodies. You come from a political background, what’s your opinion about the same?
There is no doubt that sports organisations need to be run very professionally and it’s a must to have accountability. Having said that one can’t tarnish or brand that all politicians running sports federations are bad. One must understand that there’s a lot that goes into the functioning of a sports organisation and I am not of the opinion that all sportspersons can make good administrators. You can’t expect a Leander Paes or a Mahesh Bhupathi to go to small towns like Dharwad or Davangere to organise an ITF tournament (In reference to the on-going ITF tournaments being conducted in small towns in Karnataka). But those already running associations are doing it.
I sit a day before the Chennai Open and make ties for the matches and look into how junior players are performing. One can’t expect a well-recognised international player to be doing that.
Even to that matter, if a Mohandas Pai quits his corporate job tomorrow and wants to enter sports administration, can he over-night become a president of any federation? There are certain set of rules for everything.
One can’t brand every politician in sports administration as bad. If tomorrow Sachin Tendulkar becomes an administrator, would he be called a politician or a sportsperson? He is a member of the parliament. Kirti Azad, Pataudi all of them have been MPs. I was involved with tennis much before I became a member of the AICC.
The most important thing is to not have honorary posts and have a pay scale for every administrator.
The anger about politicians being at the helm of sports federation is that there is no accountability of usage of funds…
Look at a sport like tenpin bowling. You think we have money in abundance? It’s hard to survive if we can’t get sponsors. Sometimes we put money out of our pockets. One can’t expect that I or my colleagues running this sport is syphoning money because there isn’t any. Federations in India don’t have money like the BCCI.
What about politicians holding more than one position in sports organisations? A lot of them are flouting rules and have been around for donkey’s years…
That way you need to have a term even for politicians. Why is the same person elected over and over again? Why don’t you get young blood into the system? The system itself is flawed.
If I am running the sport for eight years then I need to have a target. I have come in with an ambition that tenpin bowling will win a medal in the 2014 Asian Games. If my bowlers have an average of say 185 pinfall when I entered the federation when I end my term I need to show that the bowlers are doing well above 210-215 average. One must have accountability and show performance even as administrators.
Is it important to have strong political backing to successfully run a sports organisation?
It does help. I think I open doors, there’s no doubt about it. The chance I get to access corporates is better than anyone who comes from a different background. But I choose to leverage my goodwill in sport while some do it in different things.
You have been criticised for being involved with more than one sport…
- I don’t know why that should be a problem. Before people write me off for being involved with different federations, have they for once tried to talk to the players to find out if I have been doing my job well enough or not? Have they ever found out if my presence has helped a player improve or not? I am targeted for going to the Wimbledon every year. Why shouldn’t I go? It’s the best forum where I get to meet a lot of players and their agents; I meet people who make rackets and other equipment. I meet coaches and talk tennis with them. It only helps me bring back the knowledge and implement here.
Chennai Open has run into a bit of trouble lately and it’s learnt that the event could be move to China?
Yes China and Turkey have been very keen on hosting the event and even bid for it but as long as we don’t conclude that we can’t pull off the event and that we are in no position to oraganise it only then the event can be moved. But as of now we are ok and will continue to host the Chennai Open.
Do you foresee a void in Indian tennis when the big guys – Leander Paes, Mahesh Bhupathi—retire from the sport?
No. I don’t think we will miss them much. In Davis Cup most of our point earners are the singles players. When we took the team to Serbia, we had a very young team with Somdev, Rohan Bopanna, Sriram Balaji, Karan Rastogi and Yuki Bhambri. Somdev beat Tipsarevic (Janko Tipsarevic) in singles, the doubles pair lost very closely to Serbia. I think we did extremely well against the defending champs Serbia. If it was a singles player who was quitting then it would have bothered me but on a given day two good singles players can pull off a doubles win
23 ஆகஸ்ட் 2008 - தினத்தந்தி சர்வதேச தலைவர்களுக்கான கூட்டத்தில் கார்த்தி ப சிதம்பரம் பங்கேற்புஇன்று அமெரிக்கா செல்கிறார். சென்னை, ஆக.23 தேசிய ஜனநாயக அமைப்பின் சர்வதேச தலைவர்களுக்கான அமைப்பு கூட்டம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 23-ந் தேதி வரை கொலாரிடோ மாகாணத்தில் டெனவர் நகரில் நடைபெற இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுகிற இந்த மாநாட்டில் அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மேடாலின் கே. ஆல்பிரைட் அழைப்பிற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் கலந்துக்கொள்கிறார். இதற்காக அவர் இன்று (சனிக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார்
18 செப்டம்பர் 2008 - தமிழ்சுடர் அரசை விமர்சிக்கும் உரிமை காங்கிரசுக்கு உண்டு கார்த்தி ப சிதம்பரம் பேச்சுமக்கள் பிரச்சினைகளுக்காக அரசை விமர்சிக்கும் உரிமை காங்கிரசுக்கு உண்டு என்று கார்த்தி ப சிதம்பரம் கூறினார்.மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் பிறந்த நாள் விழா சென்னையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் என்.ருக்மாங்கதன் தலைமையில் எழும்பூரில் பொதுக்கூட்டம், கல்வி எழுச்சி நாள் விழா, அணு ஒப்பந்த வெற்றி விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சுமார் 200 மாநகராட்சிப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடை,ஷூ-சாக்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கினர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடை, ஷூ-சாக்ஸ், டை, நேம் பேட்ச் உள்ளிட்டவற்றை முதன்முறையாக கவுன்சிலர் ருக்மாங்கதன் மாநகராட்சிப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.இந்த விழாவில் கார்த்தி ப சிதம்பரம் பேசுகையில், காங்கிரசின் வாக்கு வங்கியை வைத்தே தி.மு.கவும், அ.தி.மு.க.வும் வெற்றி பெறுகின்றன. காங்கிரஸ் தயவில்லாமல் திராவிடக் கட்சிகளால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. எனவே தான் காங்கிரசை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் நமக்கு பங்கு கிடைப்பதில்லை. எனவே, மற்ற அரசியல் கட்சிகளைப் போல் பிரசாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட வேண்டும். காங்கிரசார் செய்யும் சேவைகளை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டும். மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசின் மூலமாகத்தான் வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.பா.ம.க மற்றும் கம்யூனிஸ்ட்டு கட்சிகளைப் போல ஆட்சியில் இருக்கும் அரசை விமர்சிக்கும் உரிமை காங்கிரசுக்கும் உண்டு. கூட்டணி அரசு என்றாலும் நாகரீகமான முறையில் விமர்சிக்கலாம். மக்கள் பிரச்சனைக்காக போராட்டத்திலும், புரட்சியிலும் ஈடுபட்டால் தான் மக்கள் ஆதரவு அதிகரிக்கும் என்றார்.
No comments:
Post a Comment