தமிழ்நாட்டில் பண்டைய சோழ மன்னர்களின் முடிசூட்டு விழா நடைபெரும் சிதம்பரம் நகர் பஞ்சபூத சைவ ஸ்தலங்களில்"ஆகாயத்தை" குறிக்கும் முதன்மை இடமாகும்.
உலகலொம் என இறைவன் அடி எடுத்துக்கொடுக்கப் பெற்று சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை இயற்றி அரங்கேற்றிய இடமும் சிதம்பரமாகும்.
நடராஜர் நந்தனாலை ஏற்றுக்கொண்ட தில்லைசிதம்பரத்தின் பெயரை தாங்கியுள்ள ப.சிதம்பரம் மேண்மைசால் திரு.பழநியப்பன் திருமதி.லஷ்மி ஆச்சி தம்பதிகளுக்கு சிவகங்கை சீமையில் மகனாக பிறந்தார்.
தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காகவும், கோவில் திருப்பணிக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சமுதாயத்தில் தோன்றியவர்தான் ப.சிதம்பரம்.
தென்னார்காடு மாவட்டத்தில் இன்றைய கடலூர் மாவட்டம் அனைவருக்கும் கல்வி அறிவை கொடுத்திட்ட சிதம்பரம் நகரில் இராமசாமி செட்டியார் பள்ளி,மீனாட்சி கல்லூரி,பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என ஆழமரம்போல் கல்விப்பணி ஆற்றிடும் கல்வி நிருவனங்களை ஆரம்பித்த செட்டிநாட்டு அரசர் சர்.ராஜா அண்ணாமலை செட்டியாரின் பேரன் ப.சிதம்பரம் ஆவார்.
சிதம்பரம் சிறந்த பகுத்தறிவாளர், நல்ல சிந்தனையாளர். சராசரி அரசியல் வாதிகளிடமிருந்து வித்தியாசபட்டவர். போலி கெளரவம்மில்லாமல் எல்லோரிடத்திலும் மனம் திறந்து விவாதிக்கக் கூடியவர். சிறந்த வழக்கறிஞர். மேலும் தைரியமிக்கவர்.நேர்மையானவர், அன்புசெலுத்துவதில் குழந்தையாக இருப்பவர்.
எதிர்கட்சியினரை அவர் ஒருபோதும் தரம் தாழ்த்தியோ,மனம் புண்படும் வகையிலோ பேசியதில்லை. பெருந்தன்மையான உள்ளம் இருப்பதால்தான் இவ்வளவு பெரிய பதவியினை அடைய முடிந்தது.
நந்தனர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க முகாமிட்டிருந்த செங்கட்டான் தெரு குளக்கரையில் நந்தனாருக்கு கோயில் எழுப்பிய நகரத்தார் வம்சத்தில் உதித்த ப.சிதம்பரம் 63 நாயன்மார்களில் திருநாளைப்போவார் என்னும் ஸ்ரீ நந்தனார் அவதரித்த ம. ஆதனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள நந்தனார் ஆலய கும்பாபிஷேக விழாவில் 23-06-1999 ஆம் ஆண்டு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
1984 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தெடுக்கப்பெற்று தொடர்ந்து இந்திய நாட்டின் உள்துறை, நிதித்துறை, நிர்வாகத்துறை, வர்த்தகத்துறை, போன்ற முக்கிய இலாக்காக்களின் அமைச்சராக நாட்டிற்கு சிறந்த நிர்வாகத்தை கொடுத்து வருகின்றார்.
பாரளுமன்றத்தில் தன் திறமையான வாதத்தின் மூலமாக பல அரிய மசோதாக்களை கொண்டுவந்து எதிர் கட்சியினராலும் பாராட்டக்கூடிய அளவில் ஒரு சிறந்த பாராளுமன்ற ஜனநாயகவாதியாக திகழ்ந்து வருகிறார்.
மறைந்த பிரதமர்கள் திருமதி. இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்களால் அன்பு பாராட்டப்பட்டவர்.
ராஜீவ்காந்திக்கு நண்பராகவும், சிறந்த ஆலோசகராகவும் திகழ்ந்த ப.சிதம்பரம் இந்திய பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்தி காட்டி இந்திய நாட்டையும் ஒரு வல்லரசு நாடாக வருவதற்கு வித்திட்டவர்களில் ப.சிதம்பரமும் ஒருவர் ஆவார்.
1996 ஆம் ஆண்டு கூட்டணி கருத்து வேறுபாட்டின் காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் தோன்றியபோது ஒரு முக்கிய தலைவராக எழுச்சி பெற்று 1997-98 ஆண்டிற்கான நிதி திலை அறிக்கையை (budget) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததின் மூலமாக உலக அளவில் தான் ஒரு சிறந்த நிதி அமைச்சர் என பெரும் புகழ் பெற்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றிட விவசாயிகளின் கடன்பளுவை குறைப்பதற்காக ரூ.70000 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்து 2008-09 ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.
மகாத்மாகாந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்திரவாத சட்டம்,தகவல் பெறும் உரிமை சட்டம், அனைவருக்கும் கல்வி போன்ற சட்டங்கள் கொண்டு வர பிரதமர் மன்மோகன்சிங் அரசுக்கு (அன்னை சோனியா காந்தி) ஆணையிற்கிணங்க ஆலோசனை அளித்து வருகின்றார்.
கிராம அளவில் எளிய மக்களுக்கும் ஜனநாயகத்தை வழங்கவும், அடித்தட்டு மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் பஞ்சாயத்து ராஜ்யம் சட்டத்தை ராஜீவ்காந்தி கொண்டு வந்த பொழுது மசோதா தயாரிப்பதில் உற்ற ஆலோசனைகளை வழங்கியது பெருமை மிக்க செயலாகும்.
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் அனைவருக்கும் கல்வி பெற வேண்டி கிராமங்களில் ஆரம்ப பாடசாலையை துவக்கி கல்வி கண்ணை திறந்து வைத்தார். அவரை தொடர்ந்து அனைத்து பிரிவினரும் உயர்கல்வி பெற தனது நிதி அமைச்சகத்தின் மூலமாக வங்கிகளுக்கு உத்திரவினை வழங்கி கல்விகடன் வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலமாக நாட்டில் பல லட்சம் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட, சிறுபாண்மையின மாணவர்கள் தங்கு தடையின்றி கல்வி பயின்று வருகிறார்கள்.
நாட்டின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் காங்கிரஸ்"core group" மூலமாக அரசும், கட்சியும் சுலபமாக கையாளும் உத்திகளை அடிக்கடி கொடுத்து வருகிறார்.
மேலும் காஷ்மீர் மாநில தலைநகரில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சுதந்திர தின கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. ஆட்சியின் தேர்தலில் அறிக்கையை தன் சிறந்த பேச்சாற்றலால் சாத்திய படுத்தி பொது மக்களிடத்தில் தி.மு.க. ஆட்சிக்கு சர்டிபிகேட் கொடுத்து கலைஞர் கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்திட முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
தலித் சமுதாய மக்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் சந்தர்ப்ப சூழ்திலைக்கேற்ப அவர்களுடைய உழைப்பிற்கு தகுந்தவாறு அங்கீகாரம் கொடுத்து வருகிறார்.
ப.சிதம்பரமும் அவருடைய குடும்பத்தாரும் எம்மதமும் சம்மதம் என்கின்ற அளவில் கலப்பு திருமணங்கள் செய்து சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு உதாரண புருஷராக திகழ்கின்றார்.
அவருடைய அர்பணிப்புடன் கூடிய திறமைக்கும் நாட்டின் மிக, மிக உயர் பதவிகளுக்கும் மற்றும் தமிழ் நாட்டின் முதன்மை பதவிகளுக்கும் தகுதியானவராக இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு நன்மை பயப்பதாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை .நன்றி.! வணக்கம்..!
நன்றி:டாக்டர். ப.வள்ளல்பெருமான் M.B.,B.S EX.MP@MLA. அவர்கள் எழுதிய ''தலித் சமூக நீதியும் ப.சிதம்பரம்''....
No comments:
Post a Comment